Enable Javscript for better performance
அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் வெளிமாநில பக்தர்கள் தூய்மைப் பணி- Dinamani

சுடச்சுட

    

    அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் வெளிமாநில பக்தர்கள் தூய்மைப் பணி

    By DN  |   Published on : 28th January 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம், ஜன. 27: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல் பகுதியில், செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர மாநில பக்தர்கள் சார்பில் தூய்மைப்பணி நடைபெற்றது.

      மகாராஷ்டிர மாநிலம், ஸ்ரீதர் மகாராஜா சங்சந்த் ஹாத்திரி பாம்ஹாட் சேவை மைய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி கோகுல் கோப்ரே தலைமையில்,  அக்னிதீர்த்தக் கடல் பகுதியில், செவ்வாய்க்கிழமை தூய்மைப்பணி நடைபெற்றது. தூய்மைப் பணியை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் துவக்கி வைத்தார்.

     தொடர்ந்து, அக்னிதீர்த்தக் கடல் பகுதியில், பக்தர்களால் விடப்பட்ட  துணிகள், பக்தர்கள் பயன்படுத்திய குப்பைகள், பாலீதீன் பைகள் போன்றவை அகற்றப்பட்டன. குப்பைகள், ராமேசுவரம் நகராட்சி வாகனம் மூலம் குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

    தூய்மைப் பணியில், ராமேசுவரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஐயப்பன், ராமேசுவரம்  விவேகானந்தா கேந்திர நிர்வாகி சரஸ்வதி மற்றும்  பெண்கள் உள்பட 200 பக்தர்களும், நகராட்சி ஊழியர்களும் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai