Enable Javscript for better performance
அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கமுதி. ஜன. 27:  கமுதியில் உதவி காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ராஜன் சஞ்சய் உத்தரவின் பேரில், ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் ராஜ கென்னடி, மாடசாமி ஆகியோர், போலீஸாருடன் குண்டாறு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றுக்குள் அனுமதியின்றி மது விற்ற ஜெயராமன்(47), லிங்கம்(52) இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, 16 பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    மதுபானக் கடையில் திருட்டு: கமுதி பேருந்துநிலையம் எதிரே அரசு மதுபானக்டை உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை கடை மூடப்பட்டிருந்தது. இதைப்பயன்படுத்தி மர்ம நபர்கள், கடையின் பின்புறம் உள்ள சன்னல் கதவை உடைத்து, 60 மதுபாட்டில்களை திருடிச் சென்று விட்டார்களாம். இதுகுறித்த புகாரின்பேரில், கமுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai