Enable Javscript for better performance
இருதலை மணியன் பாம்பு மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மண்டபம் முகாம் பகுதியில், திங்கள்கிழமை இரவு, அரியவகை இருதலை மணியன் பாம்பு பிடிபட்டது.

    மண்படம் முகாம் காவல் நிலைய வளாகத்தில், திங்கள்கிழமை இரவு அரியவகை இருதலை மணியன் பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. இதைக்கண்ட போலீஸார், மண்டபம் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், வனக்காப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான வன அலுவலர்கள், சம்பவ இடத்துக்குச்சென்று இருதலை மணியன் பாம்பை மீட்டு, வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து வனவர் ஜாபர் கூறியது:  மண்டபம் பகுதியில் பிடிபட்ட இருதலை மணியன் பாம்பு 3 அடி நீளமும், 2 கிலோ 300 கிராம் எடையும் உள்ளது. இந்த பாம்பு  மணலுக்கு அடியில் வாழக்கூடியதால், சில நேரங்களில் வெளியில் வந்து விட்டு, மீண்டும் மணலுக்குள் சென்று விடும் தன்மை உடையது. மீட்கப்பட்ட பாம்பு  மண்டபம் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai