Enable Javscript for better performance
ஊராட்சி ஆணையர், காவல் ஆய்வாளருக்கு சிறப்பு விருது- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற, குடியரசு தின விழா நிகழ்ச்சியில், திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திக்கு, சிறப்பாக பணிபுரிந்தோருக்கான விருதை,  மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் வழங்கினார்.

    விருதுபெற்ற காந்திக்கு,  ஒன்றியத் தலைவர் முனியம்மாள் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆணிமுத்து, துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள், வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    மேலும், தொண்டி காவல் துறை ஆய்வாளர் துரைபாண்டிக்கு, சிறந்த காவல் ஆய்வாளர் விருதை, கண்காணிப்பாளர் மயில்வாகனன் வழங்கினார்.

     காவல்ஆய்வாளர் துரைப்பாண்டிக்கு வர்த்தக பிரமுகர்கள், தொண்டி ரோட்டரி சங்கத் தலைவர் முகம்மது சாதிக் உள்ளிட்டோர்  வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai