Enable Javscript for better performance
கடலில் படகு மூழ்கியது:  4 மீனவர்கள் உயிர் தப்பினர்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம், ஜன. 27: மண்டபம் பகுதியிலிருந்து திங்கள்கிழமை காலை 100க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச்  சென்றனர். இதில் சந்திரசேகர் என்பவரின் படகில் சென்ற மீனவர்கள், தொண்டி கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.  செவ்வாய்க்கிழமை அதிகாலை, படகு கடல் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கியது.இதில் படகிலிருந்த உரிமையாளர் சந்திரசேகர் மற்றும் சுரேஷ், ராமகிருஷ்ணன், முத்து ஆகிய 4 மீனவர்களும்  டீசல் கேன் உள்ளிட்ட சாதனங்களை பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்துள்ளனர். அப்போது அவ்வழியாக மீன்பிடித்துக்கொண்டு வந்த, மண்டபம் மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அழைத்து வந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai