Enable Javscript for better performance
கமுதி பகுதியில் குடியரசு தினவிழா- Dinamani

சுடச்சுட

    

    கமுதி, ஜன. 27:  கமுதி சத்திரிய நாடார் கல்வி நிறுவனங்களில் ஆர்.சக்திவேல் தலைமையில்,  பா.காளிமுத்து கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

      கெளரவா உயர்நிலைப்பள்ளியில் தாளாளர் பி.சுப்பராயலு கொடி ஏற்றினார். ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, சுந்தரபுரம் இக்பால் உயர்நிலைப்பள்ளி, கோட்டை மேடு அரசு மேல்நிலைப்பள்ளி, கண்ணார்பட்டி, ஊ.ஒ.துவக்கப் பள்ளி ஆகியவற்றில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் நினைவு கல்லூரியில் முதல்வர் மணிமாறன் கொடி ஏற்றினார். கலாவிருத்தி மேல்நிலைப்பள்ளியில்,  தாளாளர் டி.எம்.அசன் இப்ராஹீம் கொடி ஏற்றினார்.

    அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் எஸ்.பசீர் அகம்மது தலைமையில், ஆசிரியர் எஸ்.சுல்தான் பாட்சா கொடி ஏற்றினார்.

    ரகுமானியா மெட்ரிக் பள்ளி, கோட்டைமேடு அப்துல் ரகுமான் கார்டன் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தாளாளர் வி.என்.ஏ.ஆயிஷா பீவி தலைமையில், அப்துல் ரகுமான் பட்டேல் கல்விச் சங்க தலைவர்  என்.முகம்மது முஸ்தபா கொடி ஏற்றினார்.

      உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கோட்டைமேடு ரிசர்வ் போலீஸ் படை, கமுதி காவல் நிலையம் ஆகியவற்றில் உதவி காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ராஜன் சஞ்சய் கொடி ஏற்றினார்.

      கமுதி தலைமை அஞ்சல் நிலையத்தில் அதிகாரி ராஜூ, கிளை அஞ்சல் அலுவலகங்களில் அதிகாரிகள் புவனேந்திரன்(மண்டலமாணிக்கம்), பாண்டிச்செல்வி(பெருநாழி),  ரமேஷ் பாபு (கோட்டைமேடு), நாகலட்சுமி(அபிராமம்), சுப்புராஜலட்சுமி (பேரையூர்), ஆகியோர் கொடி ஏற்றினர்.

    அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி, டாக்டர் அபிதா பிரதாபன், தீ அணைப்பு நிலையத்தில் தலைமை அதிகாரி பி.கருப்பசாமி, அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொடி ஏற்றினர். 

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் த.பாலு கொடி ஏற்றினார். துணை ஆணையர்(திட்டம்) சண்முகசாமி வரவேற்றார்.

    பேரூராட்சியில் தலைவர் எஸ்.கே.சி.ரமேஷ்பாபு கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மாரியம்மாள், ஜோதி மணி, ஜெரினா பீவி, செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai