Enable Javscript for better performance
காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 பேருக்கு முதல்வர் விருது- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 பேருக்கு முதல்வர் விருது

    By ராமநாதபுரம்  |   Published on : 28th January 2015 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம், ஜன. 27: ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 பேருக்கு முதலமைச்சர் பதக்கங்களை ஆட்சியர் க. நந்தகுமார் திங்கள்கிழமை நடந்த குடியரசு தின விழாவில் வழங்கினார்.

      ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் எஸ்.பி. மயில்வாகனனுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 பேருக்கு முதலமைச்சர் பதக்கத்தினை அவர் வழங்கினார்.

    முதல்வர் விருது பெற்றவர்கள்: (பணியாற்றும் காவல்நிலையம் அடைப்புக் குறிக்குள்)

    முருகேகன் (ராமநாதபுரம்), புவனேந்திரன் (கேணிக்கரை), சோமசுந்தரம் (எஸ்.பி.பட்டினம்), முருகன் (திருவாடானை), தாசன் (ஆயுதப்படை வாகனப் பிரிவு), பாலகிருஷ்ணன் (கீழத்தூவல்), பாபு (ராமநாதபுரம் போக்குவரத்துப் பிரிவு), ரமேஷ் பாண்டி (மாவட்ட குற்றப்பிரிவு), ஜான்பாபு (கேணிக்கரை), ராமராஜ் (ஆர்.எஸ்.மங்கலம்), ஐயப்பராஜ் (தனிப்பிரிவு), கிருஷ்ணகுமார், மாதவன் (இருவரும் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையம்), பாபுராஜ்(திருப்புல்லாணி), முருகன் (தேவிபட்டினம்), கோபி (வாலிநோக்கம்), அருள்சுந்தர் சிங் (ராமேசுவரம்), முத்து மருதவேல் (கீழக்கரை), பாண்டி (ராமநாதபுரம் நகர்), ராமகிருஷ்ணன் (ராமநாதபுரம் போக்குவரத்து), ஜெயசேகர் (ராமநாதபுரம் பஜார்), ராமச்சந்திரன் (ராமேசுவரம் போக்குவரத்து), ஐயர்ராமன் (கோவிலாங்குளம்), ஜாகீர்ஹூசேன் (தனிப்பிரிவு), சேகர் (உச்சிப்புளி), மகேந்திரன் (கேணிக்கரை), நாராயணசாமி (ராமேசுவரம் கோயில் காவல் நிலையம்), தமிழ்ச் செல்வன் (கடலாடி).

    பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினர்: காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் 10 பேர் பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர்.

    சான்றிதழ் பெற்றவர்கள் விவரம் (பணியாற்றும் இடம் அடைப்புக்குறிக்குள்):

    வி. வினோத் சாந்தாராம்- டி.எஸ்.பி. (பரமக்குடி), இன்ஸ்பெக்டர்கள் என். துரைப்பாண்டியன் (தொண்டி), ஆர். கென்னடி (கியூ பிரிவு), சார்பு ஆய்வாளர்கள் ஆர். ராமநாதன் (மாவட்ட தனிப்பிரிவு), இசக்கித்துரை (தனிப்படை), என். கணேசலிங்க பாண்டியன் (கேணிக்கரை), எஸ். சிவசுப்பிரமணியன்(கோவிலாங்குளம்), சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் கே. கணேசன் (ஏர்வாடி தர்கா காவல் நிலையம்), ஆர். சத்திய நாராயணன் (தனிப்பிரிவு- கமுதி), தலைமைக் காவலர் ஜோசப் அமல்ராஜ் (கேணிக்கரை தனிப்பிரிவு) ஆகியோர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai