Enable Javscript for better performance
பரமக்குடியில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி, ஜன. 27:  பரமக்குடியில் குடியரசு தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

     அழகப்பா பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரியில், இயக்குநர் எஸ். பாலசுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றினார்.

    ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில்  தலைமையாசிரியர் செ.சந்தியாகு தேசியக்கொடி ஏற்றினார்.

    கே.ஜே.கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் இ.உமர்முகம்மது தலைமையில் டாக்டர் கே. சிவக்குமார் தேசியக் கொடியை ஏற்றினார்.

     ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரியில் செயலர் வி.எஸ்.என். செல்வராஜ் முன்னிலையில் சபைத் தலைவர் எஸ். பாலுச்சாமி தேசியக் கொடியை ஏற்றினார்.

    பாரதியார் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் த.நாகராசு முன்னிலையில் செயலர் கே.ஏ.எம். குணசேகரன் தேசியக் கொடியை ஏற்றினார்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஏ.வி. மீனாட்சிசுந்தரம் தேசியக் கொடி ஏற்றினார்.

     காளிதாஸ் நடுநிலைப் பள்ளியில் நிர்வாக அலுவலர் எஸ்.நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றினார்.

    ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரியில் தலைவர் கே.வி.எஸ்.பாண்டியன் தலைமையில், புலவர் மீ.சீனிவாசன் தேசியக் கொடி ஏற்றினார்.

    முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் எஸ்.கமலநாதன் வரவேற்க, அதன் தலைவர் ஆர். முருகானந்தம் தேசியக் கொடி ஏற்றினார்.

     கமுதக்குடி இந்து தொடக்கப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி தலைமையில் பள்ளிச் செயலர் என்.எஸ்.நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.

    கொட்டகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சி. மல்லிகா தேசியக் கொடியை ஏற்றினார்.

    சோமநாதபுரம் செளராஷ்ட்ர தேசிய நடுநிலைப் பள்ளியில் சபைத் தலைவர் கே.ஆர்.சரவணன் தேசியக் கொடியை  ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai