Enable Javscript for better performance
பரமக்குடியில் சாரணர் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி, ஜன. 27: பரமக்குடி ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவில், சாரணர்-சாரணியர்களுக்கான திருதிய சோபன் பயிற்சி முகாம்  மூன்று நாள் நடைபெற்றது.

     இம்முகாமுக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஏ.வி.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். சாரணர் ஆணையர்கள் எம்.சேதுராமு, என்.நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சாரணர் அமைப்புச் செயலர் கே.கணபதி வரவேற்றார்.

     பயற்சி முகாமை பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் வி.பழனியாண்டி சாரணர் கொடியேற்றி துவக்கி வைத்தார். இதில் 38 பள்ளிகளைச் சேர்ந்த 215 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மாநில பயிற்சியாளர் எபினேசர் சந்திரஹாசன் மற்றும் உதவி முகாம் அலுவலர்கள் எஸ்.கே.பிரகாஷ், எஸ்.ஆரோக்கியஅருள்தாஸ் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

     சாரணர் ஆசிரியர்கள் பென்னிஅரசு, ஹிதாயத்துல்லா, மோட்சஅருள் ஆகியோர் கலந்துகொண்டனர். சாரணர் ஆசிரியர் டி.சரவணக்குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai