Enable Javscript for better performance
பேரூராட்சி பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: கவுன்சிலர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பேரூராட்சி பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: கவுன்சிலர் கைது

    By கமுதி  |   Published on : 28th January 2015 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி, ஜன. 27:  கமுதி அருகே கண்ணார்பட்டியைச் சேர்ந்தவர் சேகர். இவர் 7 ஆண்டுகளுக்கு முன், கமுதி பேரூராட்சி ஊழியராக பணிபுரிந்த நிலையில் உயிரிழந்தார். இதனால், சேகரின் மனைவி தேவிக்கு, கருணை அடிப்படையில், பேரூராட்சி அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த தேவிக்கும், கவுன்சிலர் வேழவேந்தன் என்பவருக்கும் இடையே, பணிகள் குறித்து பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், திங்கள்கிழமை இரவு வீட்டுக்குச் சென்ற தேவியை, கவுன்சிலர் வேழவேந்தன் வழிமறித்து, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தேவி அளித்த புகாரின் பேரில், கமுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வேழவேந்தனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai