Enable Javscript for better performance
ராமநாத சுவாமி கோயிலில் ரூ.1 கோடியில் புதிய கருங்கல் மண்டபம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாத சுவாமி கோயிலில் ரூ.1 கோடியில் புதிய கருங்கல் மண்டபம்

    By ராமேசுவரம்  |   Published on : 28th January 2015 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம், ஜன. 27: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில், அம்மன் சன்னதி நுழைவு வாயில், ரூ.1 கோடி மதிப்பில் புதிய கருங்கல் மண்டபம் கட்டும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

     ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்த, கோயில் நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனையொட்டி, கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியின் கிழக்கு நுழைவுவாயிலில், 80 ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்ட ஓட்டுக் கொட்டகை நுழைவு வாயில் மண்டபத்தை, அகற்றி புதிதாக கருங்கல் மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், ராமேசுவரம் சிருங்கேரி மடத்தின் சார்பில், ரூ.1 கோடி மதிப்பில், புதிய மண்டபம் கட்டிக்கொடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய மண்டபம் கட்டுவதற்காக, கோயில் நுழைவு வாயிலில் இருந்த பழைய மண்டபத்தை அகற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

    இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறியது:

    பல கோடி ரூபாய் மதிப்பில், கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய மண்டபத்துக்கான, கருங்கற்கள் பெங்களூர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. மண்டபக் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai