Enable Javscript for better performance
வாகன விபத்தில் மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாயல்குடியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகன் சோலை பிரசாந்த்(16). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை, சோலை பிரசாந்த், முத்துப்பாண்டி இருவரும், இருசக்கரவாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    சண்முக குமாரபுரம் அருகே சென்ற போது, எதிரே சாகுல் ஹமீது என்பவர் ஓட்டி வந்த, இருசக்கரவாகனம் மோதியதில், சோலைபிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    முத்துப்பாண்டியும், சாகுல் ஹமீதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சாயல்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    விபத்தில் 2 பேர் காயம்: கமுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர் கோட்டைமேட்டுக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிரே முத்தாலங்குளத்தைச் சேர்ந்த  ராஜேந்திரன்(45) என்பவர் ஓட்டிவந்த இருசக்கரவாகனம், ஆட்டோ மீது மோதியது.

    இதில், இருவரும் பலத்த காயம் அடைந்த நிலையில், ராஜேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையிலும், சதீஷ்குமார் கமுதி அரசு மருத்துமவனையிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கமுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai