Enable Javscript for better performance
விதிமுறைக்கு உள்படாத \\\"நம்பர் பிளேட்டுகள்\\\' விற்பனை- Dinamani

சுடச்சுட

    

    விதிமுறைக்கு உள்படாத "நம்பர் பிளேட்டுகள்' விற்பனை

    By ராமநாதபுரம்  |   Published on : 28th January 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம், ஜன.  27: ராமநாதபுரத்தில், விதிமுறைக்கு உள்படாத வாகன நம்பர் பிளேட்டுகள் தயாரித்து விற்ற 9 பேரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் கூறியது:

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும், இம்மாதம் 26ஆம் தேதி வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகனச் சோதனையின் போது ஐசஈ அடையாளம் பொறிக்கப்பட்ட    எண் பலகையுடன் சென்ற, 65 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்களிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி நகரில் 12 கடைகளில் ஐசஈ  அடையாளம் பொறித்த வாகன எண் பலகை ஏற்பாடு செய்து தரப்படுவதாக தெரிய வந்தது.

    உடனடியாக அக்கடைகளில் சோதனை செய்த போது ஐசஈ அடையாளம் பொறித்த, வாகன எண் பலகைகளை மதுரை, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பெற்று, சட்ட விரோதமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து தருவது உறுதி செய்யப்பட்டது.

     இதன் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் மற்றும் பஜார் காவல் நிலையங்கள், கேணிக்கரை காவல் நிலையம், பரமக்குடி நகர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

     இவ்வழக்குகளில் தொடர்புடைய, ராமநாதபுரத்தை சேர்ந்த நூருல்அயூப்(49), முகம்மது ஜலீல்(27), சத்தியராஜ்(29), தினேஷ்(27), மாரிமுத்து(30), முத்துக்காமு(35), பழனிச்சாமி(36), பரமக்குடி பாரதிநகரை சேர்ந்த அப்துல்அஜீஸ்(33), பரமக்குடி சுந்தர்ராஜப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா(32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சட்ட விரோதமாக ஐசஈ அடையாளம் பொறித்த வாகன எண் பலகைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள், எண் பலகை ஏற்பாடு செய்து கொடுப்பவர்கள் மற்றும் தயார்

    செய்து கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி.மயில்வாகனன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai