Enable Javscript for better performance
தனுஷ்கோடி அருகே மர்ம பைபர் படகு- Dinamani

சுடச்சுட

    

    தனுஷ்கோடி கடலில் நிறுத்தப்பட்டிருந்த மர்ம பைபர் படகை சுங்கத்துறையினர் வியாழக்கிழமை கைப்பற்றினர். அதில் தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள் குறித்து மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி அர்ச்சல்முனையிலிருந்து கடலில் 1 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டாம் மணல்தீடையில் ஒரு பைபர் படகு நிறுத்தப்பட்டுள்ளதாக ராமேசுவரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த படகை கைப்பற்றி சோதனையிட்டனர். அப்போது அது இலங்கை பகுதியைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது.

     அதன் பின்னர் படகிலிருந்த மீன்பிடி வலைகள், மண்ணெண்ணெய் மற்றும் அதிக திறன் கொண்ட என்ஜின் ஆகியவற்றை கைப்பற்றினர். பிறகு அந்த படகை ராமேசுவரம் துறைமுகப் பகுதிக்கு கொண்டு வந்து நங்கூரமிட்டு பாதுகாப்பாக கடலில் நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீஸார் அந்த படகை பார்வையிட்டு, அதிலிருந்து தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai