Enable Javscript for better performance
தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோயிலில் சுவாமி, அம்மன் வீதி உலா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோயிலில் சுவாமி, அம்மன் வீதி உலா

    By ராமேசுவரம்  |   Published on : 15th April 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

     கோயிலில் அன்று அதிகாலை 3 மணிக்கே நடைகள் திறக்கப்பட்டன. பின்னர் சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்க பூஜையும், அதிகாலை பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலில் தமிழக இந்து அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் திருக்கோயிலிலுள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி, அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். காலை 9 மணிக்கு சுவாமி, அம்மன் மலர் அலங்காரத்துடன் தங்க ரிஷப வாகனத்தில்  புறப்பாடாகி அக்னி தீர்த்தக்கடல் பகுதிக்கு சென்றனர். அங்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி, அம்மன் அப்பகுதியிலிருந்து புறப்பட்டு, சன்னதி தெரு வழியாக கோயிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், கோயில் அலுவலர் மாரியப்பன், செல்லம், காசாளர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai