Enable Javscript for better performance
பரமக்குடியில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடியில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு

    By பரமக்குடி  |   Published on : 15th April 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிகுலேசன் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் புதன்கிழமை ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 96ஆவது நினைவு தினம் அனுசரிப்பும், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 86ஆவது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

     இந்நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலர் ந.சேகரன் தலைமை வகித்தார். ஏ.வி. மேல்நிலைப் பள்ளித் தாளாளர் எஸ்.கே.பி.இளங்கோ, ஏ.வி.மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஆர்.முருகானந்தம், பொருளாளர் எஸ்.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருமன்ற துணைத் தலைவர் ஆ.ஜோசப் வரவேற்றார்.

     கூட்டத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோரும் தீர்மானத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றிட வேண்டும் எனவும், இதுகுறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரப்புரை மேற்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     நிகழ்ச்சியில், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்து ஆசிரியர் கண்ணன் சிறப்புரையாற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai