Enable Javscript for better performance
பரமக்குடி அருகே வாகனச் சோதனையில் ரூ.4.55 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி அருகே வாகனச் சோதனையில் ரூ.4.55 லட்சம் பறிமுதல்

    By பரமக்குடி  |   Published on : 15th April 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி அருகே தேர்தல் பறக்கும்படையினர் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.4.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

     ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் ஐஸ் கிரீம் மற்றும் பால் கடை நடத்தி வருகிறார். இவர் மதுரையில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்காக ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது, பார்த்திபனூர் விலக்குச் சாலையில் பரமக்குடி தொகுதி தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனை செய்த போது, காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.4.55 லட்சம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், வட்டாட்சியருமான எஸ்.செய்யதுமுகம்மதுவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் வெள்ளிக்கிழமை கருவூலத்தில் சேர்க்கப்படும் எனவும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் திரும்ப வழங்கப்படும் எனவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai