Enable Javscript for better performance
ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் தேவேந்திரர் நகர் குடியிருப்போர் நலச் சங்க கட்டடத்தில் தன்னார்வ ரத்ததான முகாம் அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

     தேவேந்திரர் நகர் பெரியார் இளைஞர் நற்பணி மன்றமும், வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கமும் இணைந்து நடத்திய இம்முகாம் தொடக்க விழாவுக்கு குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் வழக்குரைஞர் பாக்கியம் தலைமை வகித்தார்.

      சங்கச் செயலர் பி.ராமச்சந்திரன், பொருளாளர் மு.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன் வரவேற்றார்.

     முகாமில் 35 பேரிடமிருந்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலர் டாக்டர். எம்.ஜி.ஷேக் அப்துல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். 

     ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எஸ்.அய்யப்பன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai