சுடச்சுட

    

    இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு மீண்டும் சிறைக்காவல் நீட்டிப்பு

    By ராமேசுவரம்  |   Published on : 01st July 2016 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கைச் சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு ஜூலை 8 ஆம் தேதி வரை சிறைக்காவலை மீண்டும் நீட்டித்து, அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.  

      ராமேசுவரம் பகுதியிலிருந்து ஜூன் 4 ஆம் தேதி பாஸ்கரன் என்பவருக்குச் சொந்தமான படகில் அப்துல்கரீம், முருகன், ஆரோக்கியம், அபுதாஹிர் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

      நீதிமன்றத்தில் மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி, அவர்களை ஜூன் 16 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், 4 மீனவர்களையும் போலீஸார் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

      இந்நிலையில், மீனவர்களை ஜூன் 16 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களது சிறைக்காவலை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, வியாழக்கிழமை போலீஸார் மீண்டும் மீனவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி எம்.எம். ரியாஸ், வழக்கு குறித்து போதுமான ஆவணங்களை இலங்கைக் கடற்படையினர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பதால், ஜூலை 8 ஆம் தேதி வரை மீனவர்களது சிறைக்காவலை மீண்டும் நீட்டித்து உத்தரவிட்டார்.

     அதன்பேரில், 4 மீனவர்களையும் போலீஸார் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai