Enable Javscript for better performance
உச்சிப்புளியில் கடற்படை வீரர் வீட்டில் பொருள்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    உச்சிப்புளியில் கடற்படை வீரர் வீட்டில் பொருள்கள் திருட்டு

    By ராமநாதபுரம்  |   Published on : 01st July 2016 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹரியாணா மாநிலம், ராஜேந்திரா காலனியை சேர்ந்த சுரேஷ்சுந்தர் மகன் சுமித்குமார் (28). இவர், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து இந்தியக் கடற்படை விமான வீரராகப் பணியாற்றி வருகிறார். உச்சிப்புளி அருகே துத்திவலசை கிராமத்தில் குடியிருந்து வரும் இவரது வீட்டின் பூட்டை உடைத்து,  தொலைக்காட்சிப் பெட்டி, டி.வி.டி. பிளேயர், மடிக்கணினி என மொத்தம் ரூ.69 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

      இது தொடர்பாக, சுமித்குமார் உச்சிப்புளி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai