Enable Javscript for better performance
சத்திரக்குடி, போகலூர் நியாயவிலைக் கடைகளில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சத்திரக்குடி, போகலூர் நியாயவிலைக் கடைகளில் ஆட்சியர் ஆய்வு

    By ராமநாதபுரம்  |   Published on : 01st July 2016 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் அருகேயுள்ள சத்திரக்குடி, போகலூர் நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் மற்றும் செல்லிடப்பேசி எண் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் ஆய்வு செய்தார்.

       ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் அன்றாடம் பெறும் அத்தியாவசியப் பொருள்கள் குறித்த விவரங்களை குறுந்தகவல் மூலம் தெரிந்துகொள்ள ஏதுவாக, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் அட்டை எண் மற்றும் செல்லிடப்பேசி எண்களைப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் வாங்கும் அத்தியாவசியப் பொருள்களுக்கு ரசீது வழங்குவதுடன், அது தொடர்பான தகவல் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக உடனடியாக அனுப்பப்படும்.

      ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி, போகலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு ஆட்சியர் எஸ். நடராஜன் நேரில் சென்று, அங்கு நடந்து வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

      பின்னர் அவர், அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று பார்வையிட்டார்.

      இதைத் தொடர்ந்து, சத்திரக்குடி, காமனகோட்டை, புதுவயல் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்ற ஆட்சியர், மாணவ, மாணவியரிடம் தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டனவா என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டார். மேலும், பள்ளிகளில் கல்வியின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

      ஆட்சியருடன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு ஆகியோரும் சென்றிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai