சுடச்சுட

    

    நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

    By ராமேசுவரம்  |   Published on : 01st July 2016 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம்  பகுதி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை விரட்டியடித்துள்ளனர்.

      ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலை 522 விசைப் படகுகளிலும், மண்டபம் பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலும் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள், கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் 5 சிறிய கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் விரித்து வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட வலைகளை சரமாரியாக  வெட்டி சேதப்படுத்தி கடலில் வீசியுள்ளனர்.

      பின்னர், பகல் முழுவதும் அப்பகுதியிலேயே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்தி வந்துள்ளனர். இதனால், மீனவர்கள் அப்பகுதியிலிருந்து படகுகளை செலுத்திக்கொண்டு, ராமேசுவரம் கடலோரப் பகுதியில் வந்து காத்திருந்துள்ளனர்.

      சில மணி நேரத்துக்குப் பின்னர், இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றதும், மீனவர்கள் அங்கு சென்று கடலில் வெட்டி வீசப்பட்ட வலைகளை சேகரித்துள்ளனர். அதையடுத்து, ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மீன்களை பிடித்துவிட்டு, வியாழக்கிழமை காலை கரை திரும்பினர்.

      இது குறித்து, ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவர் என்.ஜே. போஸ் தெரிவித்தது:

    மீன்பிடித் தடைக்காலம் முடிந்து ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து தற்போது வரை, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொருளாதாரத்தை இழந்துவரும் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை கைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அவர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai