Enable Javscript for better performance
பரமக்குடியில் மது, புகைப்பழக்கத்தால் வழிமாறிச் செல்லும் மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடியில் மது, புகைப்பழக்கத்தால் வழிமாறிச் செல்லும் மாணவர்கள்

    By பரமக்குடி  |   Published on : 01st July 2016 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடியில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் மது மற்றும் புகையிலைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால், அவர்களது வாழக்கை வழிமாறிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

       பரமக்குடியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களில் சிலர் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாமல், சமூக விரோதிகளுடன் சேர்ந்து மது, கஞ்சா, புகைப்பழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

      இம்மாணவர்கள், கருவேல் மரங்கள் நிறைந்த பரமக்குடி ரயில் நிலையம், வைகை ஆற்றில் பாலடைந்து காணப்படும் குடிநீர்த் தொட்டிகள், வைகை ஆற்றின் மேம்பாலத் தரைப்பகுதி, காக்காத்தோப்பு, சந்தைக் கடை மினி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை தேர்ந்தெடுத்து தீய பழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் இதுபோன்ற மாணவர்களுக்கு உதவி செய்வதுபோல், அவர்களது வாழ்க்கையை திசைதிருப்பி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai