சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியச் செயற்பொறியாளர் எம். ஜோசப் செல்வராஜ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

       இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: (மின்பராமரிப்பு பணிகள் நடைபெறும் துணை மின் நிலையம் அடைப்புக் குறிக்குள்)

      ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகர், ஆட்சியர் அலுவலகம், பட்டினம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளடக்கிய பகுதிகள். 

      ராமநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்,  திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி.

      ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, ரெகுநாதபுரம், காரான், வண்ணான்குண்டு, தினைக்குளம், தெற்கு காட்டூர், நைனாமரைக்கான் பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்கள்.

      தேவிபட்டினம் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும், தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலை., பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை பகுதிகள்.

      ஆர்.காவனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும், ஆர்.காவனூர், தொருவளூர், முதலூர், கிளியூர், தேத்தாங்கால், குளத்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai