சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் கல்லூரி அமைக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

    By ராமேசுவரம்  |   Published on : 01st July 2016 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

       ராமேசுவரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு கூட்டம், அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் சுடலைகாசி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் சாமிநாததுரை மற்றும் ராமேசுவரம் தாலுகா செயலர் சி.ஆர். செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      இதில், ராமேசுவரம் பகுதியில் வசித்து வருபவர்களில் 75 சதவீதம் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது குழந்தைகள் கல்லூரி படிப்புக்காக மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்று தங்கி படித்து வருகின்றனர்.

      அதுபோல, ராமநாதபுரத்துக்கும் சென்று வருகின்றனர். இதனால், அதிகாலையில் செல்லும் மாணவ, மாணவியர் இரவு வீடு திரும்புவதால், பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. மேலும், பேருந்து கட்டணம், விடுதி கட்டணம் என பல்வேறு செலவுகளும் உள்ளதால், ஏழை மீனவக் குழந்தைகள் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் பிளஸ் 2 படிப்புடன் நிறுத்தி விடுகின்றனர்.

      எனவே, மீனவக் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்த, ராமேசுவரம் பகுதியில்  கலைக்கல்லூரி அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசுக்கு தபால் மூலம் மனு அனுப்பி வைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai