Enable Javscript for better performance
ராமேசுவரம் அரசுப் பள்ளி வைர விழா: மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஒட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் அரசுப் பள்ளி வைர விழா: மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஒட்டம்

    By ராமேசுவரம்  |   Published on : 01st July 2016 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி வைர விழாவை முன்னிட்டு, அப்பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நிகழ்ச்சி வியாழக்கிழமை  நடைபெற்றது.

      ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதையொட்டி, இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில், வெள்ளிக்கிழமை வைர விழா நடைபெறுகிறது.

       இப்பள்ளியின் 60 ஆம் ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் சார்பில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஒட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, பாம்பன் ரயில் நிலையப் பகுதியில் தொடங்கியது. நிகழ்ச்சியை, பாம்பன் ஊராட்சிமன்றத் தலைவர் பேட்ரிக் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

       இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன், நல்லாசிரியர் ஜெயகாந்தன், ஆசிரியர்கள் கங்காதரன், தினகரன், விழா குழுவினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai