Enable Javscript for better performance
மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு: சிறந்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு: சிறந்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கல்

    By திருவாடானை  |   Published on : 02nd July 2016 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டி பேரூர் சார்பில், மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழச்சியும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசு, பள்ளிகளைப் பாராட்டி பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

    மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி துணைச் செயலர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். தமுமுக மாவட்டச் செயலர் சாதிக் பாட்சா வரவேற்றார்.

    இதில், தொண்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும், தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக்குலேஷன், அல்ஹிலால் மெட்ரிக்குலேஷன் மாணவ, மாணவிகளுக்கும், பள்ளிகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில், தொண்டி ஐக்கிய ஜமாஅத் தலைவர் பொறியாளர் அபுபக்கர் வாழ்த்துரை வழங்கினார்.

    அனைத்து ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சமுதாய தலைவர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் தமுமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      மாணவர்களுக்கு பரிசுகளை தொண்டி காவல் துறை சார்பு-ஆய்வாளர் அப்துல்லா, எஸ்.எம்.பி. நிறுவனர் சுலைமான், ஆனந்த், தொழில் அதிபர் சரவணன், பேராசிரியர் ரவி, வடக்குத் தெரு ஜமாஅத் தலைவர் செய்யது அலி, ஆசிரியர் ஜலால், கிழக்கு தெரு ஜமாஅத் தலைவர் பந்தேநவாஸ், இந்து தர்ம பரிபாலன சபை துணைத் தலைவர் ராஜா ஆகியோர் வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து, இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட தமுமுக மக்கள் தொடர்பாளர் அக்பர் சுல்தான் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai