சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 02nd July 2016 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழக்குரைஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில், சட்டப் புத்தக எரிப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

       ராமநாதபுரம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ். அழகு பாலகிருஷ்ணன் தலைமையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இதில், வழக்குரைஞர்களிடம் எந்தவித விவாதமோ அல்லது ஆலோசனையோ நடத்தாமல் வழக்குரைஞர்களுக்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து வழக்குரைஞர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து, இப்போராட்டம் நடைபெற்றது. அப்போது, வழக்குரைஞர்கள் சட்டப் புத்தக நகலை எரித்தனர்.

      இதில், மூத்த வழக்குரைஞர்கள் தங்கராஜ், நடராஜன், அற்புதராஜ், உஷாதேவி, சோமசுந்தரம் உள்பட இளம் வழக்குரைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர். சங்கச் செயலர் சலீம் நன்றி கூறினார்.

    பரமக்குடி:  பரமக்குடி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புதிய சட்ட விதிகளை திருப்பப் பெறக் கோரி, கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தை புறக்கணித்து, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்நிலையில், பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வெள்ளிக்கிழமை சங்கத் தலைவர் பி.வி. சண்முகம் தலைமையிலும், செயலர் ரவி முன்னிலையிலும் 130-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் புதிய சட்ட திருத்த விதிகளை முழுமையாக ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      ஆர்ப்பாட்டத்தில், புதிய சட்டவிதி நகல்களை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    முதுகுளத்தூர்:   முதுகுளத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர்கள் சட்டத் திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      ஆர்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்துப் பேசினார். இதில், மூத்த வழக்குரைஞர் கோவிந்தசாமி, வழக்குரைஞர்கள் முருகபூபதி, சிவராமகிருஷ்ணன் உள்பட 49 வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.

      பின்னர், நீதிமன்ற வளாகம் முன் அனைத்து வழக்குரைஞர்களும் சேர்ந்து சட்ட நகல்களை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai