சுடச்சுட

    

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய சாலை: ஆட்சியர் ஆய்வு

    By ராமநாதபுரம்  |   Published on : 02nd July 2016 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புதிதாக சாலை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

    ராமேசுவரத்தில் பக்தர்கள் புனித நீராடும் கடல் பகுதி அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இங்கு, அமாவாசை உள்ளிட்ட நாள்களில் புனித நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதைத் தவிர்க்க புதிதாக சாலை வசதி ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ஆட்சியர் எஸ். நடராஜன், வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், மகாவீர் தர்மசாலா அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளையும், தங்கச்சிமடம் மங்கள தீர்த்தக் குளத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆட்சியருடன், ராமேசுவரம் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai