சுடச்சுட

  

  ராமேசுவரம் அரசுப் பள்ளி வைர விழா: ஆட்சியர் பங்கேற்பு

  By ராமநாதபுரம்  |   Published on : 02nd July 2016 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் வைர விழா, ஆண்டு விழா,விளையாட்டு விழா மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திக்கும் நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

  இந்த விழாவுக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தார்.

  பின்னர், பள்ளியின் சாரணர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

  கடந்த 1955 இல் தொடங்கப்பட்ட இப்பள்ளி, 2015 இல் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

  இதைக் கொண்டாடும் வகையில், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    விழாவில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஆட்சியர் எஸ். நடராஜன் பரிசு வழங்கினார். 

     இதில், ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு, பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றுப் பேசினார்.

  தொடர்ந்து, நல்லாசிரியர் ஜெயகாந்தன், மீனவர் சங்கத் தலைவர் என்.ஜே. போஸ்,விவேகானந்த கேந்திரிய ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

  பின்னர் ஆட்சியர் எஸ். நடராஜன், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கும் நேரில் சென்று மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai