சுடச்சுட

  

  இளம்பெண் படத்தை கட்செவி அஞ்சலில் வெளியிடுவதாக மிரட்டியவர் கைது

  By திருவாடானை  |   Published on : 03rd July 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே விசும்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன் மருதுபாண்டியன் (30). இவருடைய தாயார் பிறந்த ஊர் விசும்பூர். எனவே, இந்த ஊருக்கு மருதுபாண்டியன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில், மருதுபாண்டியனுக்கும் கிராமத்திலுள்ள இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. இதையறிந்த மருதுபாண்டியன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை கட்செவி அஞ்சலில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியதுடன், அப்பெண்ணின் எண்ணுக்கு படத்தை கட்செவி அஞ்சல் செய்துள்ளார்.

  இது குறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து மருதுபாண்டியனை கைது செய்து, திருவாடானை நீதிபதி முன்பாக வெள்ளிக்கிழமை இரவு ஆஜர்படுத்தினர். இதை விசாரித்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, மருதுபாண்டியனை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, மருதுபாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai