Enable Javscript for better performance
கறி விருந்தில் தகராறு:இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்தவர் கொம்பையா (57). இவர், சத்திரக்குடி அருகே உள்ள மென்னந்தி கிராமத்திலுள்ள தனது குலதெய்வமான அய்யனார் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து சாமி கும்பிட்டு கிடாய் வெட்டி விருந்து வைத்துள்ளார். அப்போது, அப்பகுதி இளைஞர்கள் சிலர் விருந்து சாப்பிட வந்துள்ளனர்.

    அவர்களிடம் கொம்பையா பின்னர் வந்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். இதில் கோபமுற்ற மென்னந்தி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பாலாஜி (26) உள்பட சிலர், உருட்டுக்கட்டையால் கொம்பையாவை தாக்கியுள்ளனர். காயமுற்ற அவர், சத்திரக்குடி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீஸார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து, பாலாஜியை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai