சுடச்சுட

  

  கீழக்கரையில் இப்தார் விருந்து:ஆட்சியர் பங்கேற்பு

  By ராமநாதபுரம்  |   Published on : 03rd July 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கீழக்கரை வடக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற 25 ஆவது மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் கலந்துகொண்டார்.

  ஜமாஅத் தலைவர் அக்பர்கான் தலைமை வகித்தார். ஜமாஅத் செயலர் எம்.எம்.எஸ். முகைதீன் இப்ராகிம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜகுபர்அலி, நிசார், நகர்மன்ற உறுப்பினர் முகைதீன் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் மதகுரு சாகுல்ஹமீது ரமலான் மாதத்தில் நோன்பின் மகத்துவம் என்ற தலைப்பில் பேசினார்.

  இதில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன், நோன்பு இருப்பதால் மனித உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை விவரித்துப் பேசினார். நிகழ்ச்சியில், ராமநாதபுரம் கோட்டாட்சியர் ரா. ராம்பிரதீபன், கீழக்கரை நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா, கீழக்கரை வட்டாட்சியர் தர்மன், கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் கே.ஏ. தமீம்ராஜா, முன்னாள் ஜமாஅத் தலைவர் ரத்தினமுகம்மது உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai