சுடச்சுட

  

  கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு, மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

  இதற்கு, முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.எம். யூசுப் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஹாமீது இப்ராகிம், முகம்மது சதக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் இ. ரஜபுதீன் வரவேற்றுப் பேசினார்.

  கீழக்கரை மதரஸாத்துல் அரூசியா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ். சலாகுதீன் ரிபாய் உஸ்மானி, கீழக்கரை வட்டார பங்குத்தந்தை எஸ். வேதமுத்து, ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே. ஹசன்அலி ஆகியோர் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்துப் பேசினர்.

  நிகழ்ச்சியில், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அ. அலாவுதீன், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெ. முஹம்மது ஜஹாபர், செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி முதல்வர் எம். ஷம்சுதீன் ஜமாலி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி, வழக்குரைஞர் பி. முனியசாமி உள்பட கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

  ஏற்பாடுகளை, கல்லூரியின் வேதியியல் துறை தலைவர்ஏ. அப்துல் சர்தார் செய்திருந்தார். நிறைவாக, நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரபித் துறை தலைவர் எஸ். அபுதாஹிர் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai