சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா, தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

    புதுக்குடியில் அமைந்துள்ள சந்தன முத்துமாரியம்மன் கோயில் 20 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கோயில் முன்பாகவுள்ள கடல் பகுதியில் படகு போட்டி நடைபெற்றது.

    இந்தப் போட்டிக்கு, தொண்டி காவல் துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். புதுக்குடி கிராமத் தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். இதில், மொத்தம் 19 படகுகள் கலந்துகொண்டன.

    பத்து கடல் மைல் தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கபட்டன.

    இதில், முதல் பரிசாக புதுக்குடியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு 30,001 ரூபாயும், இரண்டாம் பரிசாக கோட்டதுரைக்கு 20,001 ரூபாயும், மூன்றாம் பரிசாக ராமகிருஷ்ணனுக்கு 15,001 ரூபாயும், நான்காம் பரிசாக மோர்ப் பண்ணையைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு 10,001 ரூபாயும் வழங்கப்பட்டன. இப்போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai