சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு

  By ராமநாதபுரம்,  |   Published on : 03rd July 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட மாநாடு, ராமநாதபுரம் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

  மாவட்டத் தலைவர் பி. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் பி. புஷ்பராஜ், மாவட்டப் பொருளாளர் கே. ராஜரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க இணைச் செயலர் ஜி. மகேந்திரநாத் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

  மாநாட்டில், குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுவதை ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தொண்டியில் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும். ராமேசுவரத்துக்கு கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும். பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரை இருவழிச் சாலையாக ஆக்கப்படுவதை மாற்றி நான்குவழிச் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மொத்தம் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். கருணாநிதி, போக்குவரத்துத் துறை ஓய்வூதியர் நல அமைப்பின் மாநிலச் செயலர் ஜெ. பவுல்ராஜ், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் ஜி. பாண்டியன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்துப் பேசினர்.

  இதில், சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பி. கிருஷ்ணன் (மாவட்டத் தலைவர்), பி.புஷ்பராஜ் (மாவட்டச் செயலர்), கே. ராஜரெத்தினம் (மாவட்டப் பொருளாளர்) ஆகியோர் அடங்கிய நிர்வாகக் குழுவினரும் தேர்வு செய்யப்பட்டனர்.

  ஓய்வூதியர்களின் எதிர்காலம் குறித்துப் பேசிய சங்க மாநிலச் செயலர் எம். தங்கமணி, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். நிறைவாக, மாவட்டத் துணைத் தலைவர் எம். முகம்மது சீது நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai