சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் காவல்துறை வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துகள் தடுப்புப் பயிற்சி: எஸ்.பி. தொடக்கம்

    By ராமநாதபுரம்  |   Published on : 03rd July 2016 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவல்துறையில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்து, ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி. தி. இன்பமதி முன்னிலை வகித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கேமராக்கள் மூலம் நேரடியாக நடந்த விபத்துகள், நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகள் குறும்படங்களாக திரையிட்டுக் காட்டப்பட்டன.

    மேலும், சாலை சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள், வளைவுகள் மற்றும் கண்மறைவுப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாகவும், இந்தியாவில் நடக்கும் மொத்த விபத்துகளில் 80 சதவிகிதத்துக்கும் மேலானவை மனிதத் தவறுகளால் மட்டுமே நடைபெறுகின்றன எனவும் பயிற்சியின் போது தெரிவிக்கப்பட்டது.

    மதுரையைச் சேர்ந்த சாலைப் பாதுகாப்பு பயிற்சியாளர் ஏ. நரசிம்ம மணி அனைவருக்கும் பயிற்சியளித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai