சுடச்சுட

    

    ராமேசுவரம் அரசுப் பள்ளி வைர விழா: முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு

    By ராமேசுவரம்,  |   Published on : 03rd July 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 60ஆம் ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

    இப்பள்ளியின் வைர விழா, முன்னாள் மாணவர்களின் சார்பில் வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் தொடங்கியது. நிறைவு நாளான சனிக்கிழமை, பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை வகித்தார். நல்லாசிரியர் ஜெயக்காந்தன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார்.

    இதில், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் நடராஜன், கிறிஸ்டோபர் மற்றும் ஆசிரியர்கள் கமலா, நடராஜன், உமையன், மகபு, தங்கராஜ், அந்தோணி சேவியர் ஆகியோர் கலந்துகொண்டு, தங்களது மலரும் நினைவுகளை முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவர்களுடனும் பகிர்ந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai