சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா, ஆர்.எஸ்.மங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மிளகாய் சந்தை நடப்பது வழக்கம். இப்பகுதியில் விளையும் மிளகாய் அதிக காரத்தன்மை கொண்டதால், வெளி மாவட்டங்களில் இந்த மிளகாய்க்கு அதிக கிராக்கி உள்ளது.

      ஆனால், இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில், முதல் ரக மிளகாய் குவின்டால் ரூ. 16 ஆயிரத்துக்கும், இரண்டாம் ரகம் குவின்டாலுக்கு ரூ. 15 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இதே ரகங்கள் கடந்த வாரம் தலா ரூ. 1 ஆயிரம் கூடுதலாக விற்கப்பட்டது. இந்த வாரம் மிளகாய் விலை சரிந்ததால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai