சுடச்சுட

  

  கண்மாய் தூர்வாரும் பணியில் முறைகேடு: 12 கிராம மக்கள் புகார்

  By ராமநாதபுரம்  |   Published on : 04th July 2016 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் அருகே களரி கிராம கண்மாய் தூர்வாரும் பணி முறையாக நடக்கவில்லை என 12 கிராம மக்கள்  தெரிவித்தனர்.

  ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையிலிருந்து சாயல்குடி அருகே மரியராயபுரம் வரை சுமார் 1750 ஏக்கர் பரப்பளவில் களரிக் கண்மாய் உள்ளது.

  இக்கண்மாய் மூலம் திருஉத்தரகோசமங்கை, கீழச்சீத்தை, மேலச்சீத்தை, சுமை தாங்கி, ஆனைகுடி, வேப்பங்குளம், வேளானூர், குளபதம், மோர்க்குளம், வேப்பங்குளம், மேலமடை மற்றும் களரி ஆகிய 12 கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

  இக்கண்மாயை மத்திய அரசின் நிதிஉதவியுடன் ரூ.289.18 கோடி மதிப்பீட்டில் தூர்வார பொதுப்பணித்துறை டெண்டர் விட்டுள்ளது.

  ஆனால் தூர்வாரும் பணி முறையாக செய்யப்படவில்லை. இதனால் பல கிராமங்கள் பாசனவசதி பெறுவது தடுக்கப்பட்டு விடும் என அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து களரி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ராமச்சந்திரன், கிராமத் தலைவர் குமாரவேலு, அனைத்து சமுதாயத் தலைவர் தியாகராஜன், மேலமடை ஊராட்சி மன்றத் தலைவர் கேசவபாண்டி, வேளானூர் கிராமத் தலைவர் காளிமுத்து உள்பட 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இக் கண்மாயைத் தூர்வார ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளது.

  ஆனால் பணிகள் சரிவர செய்யப்படவில்லை. கடந்த 2004-ஆம் ஆண்டும் இதே போல் கண்மாய் தூர்வாரும் பணி சரிவர மேற்கொள்ளப்படவில்லை. எனவே கண்மாயை முறையாக தூர்வார வேண்டும் என்றனர்.

  இது குறித்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஒருவர் கூறியது:

  களரிக்கண்மாயைத் தூர்வார மதுரையை சேர்ந்த கிஷேர்மன் எஞ்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.274.74 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் புகார் குறித்து நேரில் ஆய்வு செய்து உண்மையாக இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai