சுடச்சுட

    

    தந்தையைத் தாக்கி மகள் கடத்தல்: காதலனுடன் சென்றதாக பெண் தகவல்

    By ராமேசுவரம்  |   Published on : 04th July 2016 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தன்னைத் தாக்கி மகளைக் கடத்திச் சென்றதாக காதலன் மீது தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார். ஆனால் தான் விரும்பியே சென்றதாகவும், திருமணம் முடிந்துவிட்டதாகவும் மகள் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

    பாம்பன் காமராஜர் தெருவில் வசிப்பவர் பாக்கியம். இவரது மகள் எக்சியா(21), ராமேசுவரம் அருகே உள்ளே தண்ணீர் ஊற்று பகுதியை சேர்ந்த பல்ராயர் மகன் பெர்க்சிபோடேல்(22). இவரும் எக்சியாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் பாக்கியத்துடன் எக்சியா ஞாயிற்றுக்கிழமை காலை ராமேசுவரம் அருகே மெய்யம்புளி பகுதியிலுள்ள தேவசபைக்கு பைக்கில் சென்றுள்ளனர். அக்காள்மடம் பகுதியில் வரும்போது பாக்கியத்தின் பைக் மீது இரண்டு கார்கள் மோதின. இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து, கார்களில் வந்த 10க்கும் மேற்பட்டோர் பாக்கியத்தை தாக்கி  எக்சியாவை காரில் கடத்திச் சென்றனர்.

     பலத்த காயமடைந்த பாக்கியம் ராமேசுவரம் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாக்கியம் அளித்த புகாரின்பேரில் பாம்பன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    திருமணம் முடிந்தது: எக்சியா

    இந்நிலையில், தான் கடத்தப்படவில்லை என்றும் காதலனுடன் விருப்பப்பட்டே சென்றதாகவும், தனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், “ஹலோ போலீஸுக்கு’ எக்சியா தகவல் தெரிவித்துள்ளார். அவர் பேசிய செல்லிடப்பேசி இணைப்பை ஆய்வு செய்தபோது அவர்கள் மதுரையில்  இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாம்பன் போலீஸார் மதுரைக்கு சென்றுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai