சுடச்சுட

    

    தனுஷ்கோடி கடலில் சுற்றுலா பயணிகள் நீராடுவதால் ஆபத்து

    By ராமேசுவரம்  |   Published on : 04th July 2016 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் தடையை மீறி நீராடும் சுற்றுலாப் பயணிகள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இவர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் புயலால் அழிந்தபோன தனுஷ்கோடி பகுதியை பார்வையிடுவதற்காக செல்கின்றனர்.

    முகுந்தராயர் சத்திரம் பகுதி முதல் தனுஷ்கோடி வரை தென் கடலில் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் நீராடுகின்றனர். இந்த கடல் பகுதியில் கடலில் நீரோட்டமும், நீரின் சுழற்சியும் அதிகமாக இருக்கும். இங்கு குளித்த பலர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் தடையை மீறி இளைஞர்களும் பெண்களும் நீராடினர். உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் இங்கு நீராடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai