சுடச்சுட

  

  திருவாடானை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

  By திருவாடானை  |   Published on : 04th July 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாடானை தாலுகா அரசு மருத்துமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

  திருவாடானையில்  தாலுகா அரசு மருத்துவமனையில் சுமார் 24 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு, இரவு நேர மகப்பேறு மருத்துவரைத் தவிர, மொத்தம் 6 மருத்துவர்களுக்கு 5 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இங்கு, திருவாடானையைச் சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் 500 பேர் வரை புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.

  ஆனால், இங்கு ஒரேயொரு தினக்கூலி துப்புரவுத் தொழிலாளி மட்டுமே பணியில் உள்ளார். இதனால்,  மருத்துவமனை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சுகாதாரக் கேட்டில் சிக்கித் தவித்து வருகிறது. பொதுப்பணித் துறை கவனிப்பின்றி உள்ளதால், பிணவறைக் கட்டடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பிணவறையில் குளிர்சாதன வசதி இல்லாததால், சில நாள்களில் சடலங்கள் அதிகமாக வந்துவிட்டால் பணியாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாக வேண்டியிருக்கிறது.

  இது குறித்து, முன்னாள் கவுன்சிலர் நாகநாதன் கூறுகையில், மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவியர்கள் இல்லாமல் போராடி வந்த நிலையில், தற்போது அவர்கள் போதிய அளவில் உள்ளனர்.

  ஆனால், மருத்துவமனை பராமரிப்பின்றி சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் தங்க அரசு ஏற்பாடு செய்தால், இவர்கள் தொலைவிலிருந்து வந்து செல்ல வேண்டியிருக்காது. இதனால், காலதாமதம் தவிர்க்கப்படும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai