சுடச்சுட

    

    பரமக்குடியில் செயல்படாத சிக்னல்களால் விபத்து அபாயம்

    By பரமக்குடி  |   Published on : 04th July 2016 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு மற்றும் ஆர்ச் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

    பரமக்குடி நகர் சுற்றுப்புற கிராம மக்கள் வந்து செல்லும் பெரிய நகரமாகும். தினமும் ஏராளமான மக்களும், வாகனங்களும் வந்து செல்கின்றன. நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே பல்வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன.

    இதனால் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள், பள்ளி வாகனங்கள் என தினந்தோறும் இச்சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.  இதில் ஐந்துமுனை சந்திப்பு மற்றும் ஆர்ச் பகுதி நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியாக உள்ளதால் அங்கு போக்குவரத்தை சரிசெய்ய சிக்னல்கள் அமைக்கப்பட்டன.

    ஆனால் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஐந்துமுனை பகுதியில் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகள் நடந்து வருகிறது. இதேபோல் ஆர்ச் பகுதியிலும் சிக்னல்கள் அமைக்கப்படவில்லை. இந்த இரண்டு இடங்களிலும் சிக்னல் விளக்குகளை சீரமைத்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai