Enable Javscript for better performance
பழமையான கல் சிலையை மூலிகைச்சிலை என விற்க முயற்சி: மதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழமையான கல் சிலையை மூலிகைச்சிலை என விற்க முயற்சி: மதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

    By ராமநாதபுரம்  |   Published on : 04th July 2016 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் இரண்டு அடி உயரமுடைய பழமையான கல் சிலையை மூலிகைச்சிலை என்று ரூ.3 கோடிக்கு விற்க முயன்றதாக மதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக மேலும் ஒரு மதிமுக பிரமுகரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

     ராமநாதபுரம் நகர் வனசங்கரி அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் தெய்வேந்திரன் மகன் ராஜலிங்கம்(48). இவர் பல்வேறு கோயில்களில் அர்ச்சகராக பணிசெய்து வருகிறார்.

     இவரது வீட்டில் ரூ.3 கோடிக்கு மூலிகைச் சிலையை விற்க முயற்சி நடந்து வருவதாக ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையினான குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

     போலீஸார் சாதாரண உடையில் சிலை வாங்குவது போல அந்த வீட்டுக்கு சென்றனர்.

     அங்கு ராஜலிங்கத்துடன் ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் மதுரையார் தெருவில் வசிக்கும், மதிமுக ராமநாதபுரம் நகர முன்னாள் செயலாளர் சிங்கம்(56), மண்டபம் சேதுநகரை சேர்ந்த வைரவநாதன் மகன் ரமேஷ்(36), ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த மதிமுக பிரமுகர் வி.கே.சுரேஷ் ஆகியோரும் இருந்துள்ளனர்.

    நால்வரும் சேர்ந்து கல்  சிலையை நவபாஷாணத்தால் ஆன பழமையான சிலை என்றுகூறி ரூ.3 கோடிக்கு விலை பேசியுள்ளனர்.

    இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது வி.கே.சுரேஷ் மட்டும் தப்பி விட்டார். ராஜலிங்கம், சிங்கம் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த முருகன் கல் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்களையும், முருகன் சிலையையும் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    காவல் ஆய்வாளர் ஏ.வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

      ராஜலிங்கத்தின் வீட்டில் 3 தலைமுறையாக இருந்து வரும் சிலை அது. சாதாரண கல் சிலையை மூலிகைச்சிலை என விற்க முயற்சி செய்துள்ளதால் நம்பிக்கை மோசடி வழக்காக பதிவு செய்துள்ளோம். இருப்பினும் எந்த வகையான சிலை என்பதை அறிய சோதனைக் கூடத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai