சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் ஜூலை 18 முதல் 30 நாள்களுக்கு இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சி

    By ராமநாதபுரம்  |   Published on : 04th July 2016 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் சார்பில், இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் பயிற்சி ஜூலை 18 ஆம் தேதி முதல் இலவசமாக கற்றுத்தரப்பட இருப்பதாக, அம்மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    இது குறித்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு மாரியம்மன் கோயில் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல வகையான பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்பட்டு வருகின்றன.

     இங்கு, ஏராளமான பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கிக் கடன்களுக்கும் ஏற்பாடு செய்து தரப்பட்டு, அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றப்படுகின்றனர்.

    இம்மையத்தின் சார்பில், இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 30 நாள்களுக்கு இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் பயிற்சியை இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.

    பயிற்சி நாள்களில் காலையிலும், மாலையிலும் தேநீர், மதிய உணவு ஆகியனவும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வங்கிக் கடன் பெறுவதற்கும் ஆலோசனை வழங்கப்படும்.

    கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் படித்தவர்களாகவும் இருக்கலாம். வயது 18 முதல் 45 வரை. பயிற்சி வகுப்புகள் தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும்.

    இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால், இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு, 04567-221612 அல்லது 94438-96577, 93440-20010 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai