சுடச்சுட

  

  ராமநாதபுரம் அருகே 2 ஆயிரம் பனைமரங்கள் தீப்பிடித்து சேதம்

  By ராமநாதபுரம்  |   Published on : 04th July 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமம் போலே நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் தீப்பிடித்து சேதமடைந்தன.

  வாலாந்தரவை கிராமத்தில் தனியார் இடங்களில் ஏராளமான பனைமரங்கள் அதிகம் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி இவற்றில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் எரிந்து சேதமாகின. தகவலறிந்து ராமநாதபுரம், மண்டபம், வழுதூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  தகவலறிந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபன், வட்டாட்சியர் மாரி, துணை வட்டாட்சியர் பழனிக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று தீயை அணைக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai