சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் மரக்கடையில் திடீர் தீ விபத்து: ரூ. 2 லட்சம் பொருள்கள் சேதம்

    By ராமேசுவரம்  |   Published on : 04th July 2016 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் மரக்கடையில்  திடீரென தீப்பிடித்து எரிந்ததில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான மரப் பலகைகள் எரிந்து நாசமாகின.

      ராமேசுவரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவர், துறைமுகப் பகுதியில் படகுகளுக்கு பொருத்தப்படும் மரப்பலகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென இக்கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

      உடனே, அப்பகுதி மீனவர்கள் ராமேசுவரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    அப்போது, கடல் காற்று பலமாக வீசியதால், சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், அக்கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்துக்கும் மேலான மரப்பலகைகளும், கடையியன் மேற்கூரையும் எரிந்து நாசமாகின.

      இது குறித்து, சாந்தகுமார் அளித்த புகாரின்பேரில், ராமேசுவரம் துறைமுகக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai