சுடச்சுட

  

  ராமேசுவரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அகற்றப்படும்: தேசிய நெடுஞ்சாலை மண்டல ஆணையர் தகவல்

  By ராமேசுவரம்  |   Published on : 04th July 2016 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனுஷ்கோடி பகுதியில் நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மண்டல ஆணையர் அரவிந்த், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அகற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

     ராமேசுவரம்-தனுஷ்கோடி பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை ஒன்பதரை கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு-புதுச்சேரி மாநில தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மண்டல ஆணையர் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடி பகுதிக்கு அதிகாரிகளுடன் வந்திருந்தார். அப்போது அவர், அங்கு போடப்பட்டு வரும் சாலையை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    பின்னர், அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: தனுஷ்கோடிக்கு செல்லும் பாதையில் முதல் கட்டமாக 5 கி.மீ. தொலைவுக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. இரண்டாம் கட்டமாக, நான்கரை கிலோ மீட்டர் தொலைவுக்கு அரிச்சல் முனைப் பகுதி வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகள் நவம்பர் மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சாலையை கடல் மணல் மேவுவதைத் தடுக்க ரூ.10 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டப்படும்.

   ராமேசுவரம் பகுதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பெருங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வாகன நுழைவுக் கட்டண வசூல் மையப் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தவுடன், மண்டபம் பகுதியில் அமைந்துள்ள வாகன நுழைவுக் கட்டண வசூல் மையமும், ராமேசுவரம் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாகன நுழைவுக் கட்டண வசூல் மையமும் அகற்றப்படும். ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில்   ஒரேயொரு வாகன நுழைவுக் கட்டண வசூல் மையம் மட்டுமே இயங்கும் என, அவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai