சுடச்சுட

    

    ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    By ராமநாதபுரம்  |   Published on : 04th July 2016 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஆடித் திருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. இரவு கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்த பின்னர் கொடியேற்றமும்,  காப்புக்கட்டுதலும் நடைபெற்றன. 

    விழாவினை முன்னிட்டு இம்மாதம் 17 ஆம் தேதி வரை தினசரி கோயில் முன்பாக மகாபாரத தொடர் திரையிடப்படவுள்ளது. இம்மாதம் 8-ஆம் தேதி ஸ்ரீபஞ்சபாண்டவர் திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி அர்ச்சுனன் தபசுக்காட்சி நடைபெறுகிறது.

    12, 13 தேதிகளில் பீமன், கீசகன் வதமும், 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 16 ஆம் தேதி அரவான் களப்பலியும், 17 ஆம் தேதி துரியோதனன் களப்பலி நிகழ்ச்சிகளும், 19 ஆம் தேதி பூக்குழி இறங்குதலும் நடைபெறவுள்ளது. கொடியேற்ற விழாவில் மருத்துவர் எஸ்.மீனாட்சி சுந்தரம், பொறியாளர் வி.மூர்த்தி மற்றும் கோயில் விழாக்குழுவினரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai